நியூஸ் 7 தமிழ் சார்பாக காரைக்குடியில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் கார்த்தி சிதம்பரம் எம்பி கலந்து கொண்டு உணவு வகைகளை பார்வையிட்டு வாங்கி சென்றார்.
“ஊரும் உணவும் – இது உங்க ஊர் திருவிழா” என்ற பெயரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பாண்டியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
ஊரும் உணவும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் சவால்களும் களைகட்டுகின்றன. திறமைகளை வெளிப்படுத்துபவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த உணவு திருவிழாவில்ல சிவகங்கை மாவட்ட எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் வருகை புரிந்தார். உணவுப்பொருட்களை ஆர்வமாக பார்வையிட்டு அவர், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு ஆகிவற்றை கார்த்தி சிதம்பரம் வாங்கி சென்றார்.
தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பாரம்பரிய உணவுகளுக்கு எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. மக்களிடம் எடுத்து செல்ல தரமான உணவுகளை கொண்டு, நிரந்தர உணவு பூங்கா அமைத்தால் பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். நியூஸ்7 தமிழ் அந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது என்று கூறினார்.
இதேபோல் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி ஊரும் உணவும் நிகழ்ச்சியை பார்வையிட்டர். பின்னர் பேட்டியளித்த அவர், நல்ல வாய்ப்பை காரைக்குடி மக்களுக்கும், உணவு தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் நியூஸ்7 தமிழ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
சிறுதானிய உணவுப்பொருள்களை ஊக்குவிக்கும் விதத்தில் நியூஸ்7 தமிழ் நடத்தி வரும் ஊரும் உணவும் திருவிழா காரைக்குடியில் அமைந்துள்ளது. மக்களுக்கு பயன் அளிக்கும் ஊரும் உணவும் திருவிழாவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறினார்.








