காவிரியில் இருந்து நீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக முறையாக செயல்படுத்தியுள்ளதாக பிரமாணப் பாத்திரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் ஏற்க மறுத்த கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.
அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், விநாடிக்கு 3000 கன அடிக்கு மேல் நீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அரசு தெரிவி்த்தது.
காவிரியில் இருந்து நீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக முறையாக செயல்படுத்தியுள்ளதாக பிரமாணப் பாத்திரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரிப் படுகையில் உள்ள நீர்த்தேக்கங்கள் முக்கியமாக தென்மேற்குப் பருவமழையை நம்பியே உள்ளன,
தமிழ்நாட்டின் நீர்த்தேக்கங்களும் வடகிழக்கு பருவமழை மூலம் நன்மை கொண்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவில் மழை இல்லாததால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது,
அதேவேளையில், கர்நாடகாவின் மழை அளவை கருத்தில் கொண்டு தான் காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது, எனவும் காவிரி ஆணையம் தெரிவித்துள்ளது.