முக்கியச் செய்திகள் தமிழகம்

கர்ணன் படக்குழுவுக்கு உதயநிதி கோரிக்கை!

கர்ணன் திரைப்படம் தொடர்பாக உதயநிதி வைத்த கோரிக்கையை படக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. 

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, வசூலையும் குவித்து வருகிறது. இத்திரைப்படம் 1995ம் ஆண்டு நடந்த கொடியன்குளம் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இருந்தாலும் 1997 ம் ஆண்டுக்கு முற்பகுதியிலிருந்து என்ற வார்த்தைகளுடன் திரைப்படம் ஆரம்பமாகிறது.  

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. 1995ம் ஆண்டு நடந்த சம்பவத்தை 1997 திமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக திமுகவினர் எதிர்வினையாற்றினர். இந்த நிலையில்  கர்ணன் திரைப்படத்தை நடிகரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கண்டுகளித்தார். 

அதன்பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி,  “கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர்  தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ்  மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 மேலும்,  “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி” எனவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராகுல் டி-சர்ட்டை கிண்டல் செய்த பாஜக : பதிலடி கொடுத்த காங்கிரஸ்

EZHILARASAN D

யூடியூப் கோ சேவை: கூகுள் நிறுவனம் நிறுத்த முடிவு

ஆளுநருக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் -பி.ஆர்.பாண்டியன்

Yuthi