சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை

மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகக்…

மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்யுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் தேர்வு எழுதப்போகும் 6 லட்சம் மாணவர்களின் உயிரும் உடல் நலனும் மிக முக்கியம் எனக்கூறியுள்ளார். மேலும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேர்வு பணிகளில் பங்கேற்க உள்ளதால் கொரோனா அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது என கூறிய அவர், தேர்வுகளுக்கு பதிலாக சில மாற்று முறைகள் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.