முக்கியச் செய்திகள் குற்றம்

சேலத்தில் 10 வயது சிறுமியை விற்பனை செய்த தாய், தந்தை கைது!

சேலத்தில் 10 வயது சிறுமியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், பெற்றோரும், தொழிலதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குழந்தை விற்பனை தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ பதிவில் குழந்தையை தொழிலதிபர் ஒருவரிடம் கொடுத்து விட்டதாகவும், அதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகவும், குழந்தையின் தாய் கூறியிருந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையின் தாய் சுமதி, தந்தை சதீஸ் மற்றும் குழந்தையை வாங்கிய தொழிலதிபர் கிருஷ்ணன், ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, தொழிலதிபர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்தும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

செய்தியாளர்களும் முன்களப் பணியாளர்களே : ஸ்டாலின்

Ezhilarasan

தன் மீதான வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி கங்கனா ரனாவத் மனு

Saravana Kumar

மகனுக்கு மாத்திரை வாங்க 300 கி.மீ சைக்கிளில் சென்ற தந்தை!

Karthick