கடலில் 27,000 அடி ஆழம் வரை செல்லும் அதிசய மீன்!

கடலின் அடிமட்டத்தில் சுமார் 27,000 ஆழம் வரை செல்லும் மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடலில் வாழும் உயிரினங்களை பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும்…

கடலின் அடிமட்டத்தில் சுமார் 27,000 ஆழம் வரை செல்லும் மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடலில் வாழும் உயிரினங்களை பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும் போது சில புது உயிரினங்களை கண்டுபிடிப்பதும் உண்டு.

அதன்படி, சமீபத்தில் ஜப்பானின் இசு-ஒகசவாரா கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார், 8,336 மீட்டர் ஆழத்தில் அதாவது, 27,349 அடி ஆழத்தில் வித்தியாசமான ஒரு மீன் இனம் கேமராவில் பதிவானது. இந்த மீன் நத்தை மீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 27,349 அடி ஆழம் வரை செல்லும் மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நத்தை மீன் சூடோலிபாரிஸ் நத்தை மீன் என அழைக்கப்படுகிறது.

இந்த நத்தை மீனை பிரஷர் டிராப் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் இரண்டு மாத காலம் தொடர் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலை க்கழகம் மற்றும் டோக்கியா கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நத்தை மீன்களின் வீடியோ யூடியூப்பில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.