கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக குளச்சலில் 2 வீடுகள் முன்தண்ணிர் சூழ்ந்த நிலையில் மேலும் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் சூழல் உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அரபிக்கடல் பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில்
கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். அவ்வப்போது ஏற்படும் கடல் அரிப்பால்
கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது வாடிக்கையான நிகழ்வு என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் மற்றும் அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்று வீசுவது காரணமாக கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது.
இந்த நிலையில் அழிக்கால் குளச்சல் மீனவ கிராமங்களில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பியது. கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததோடு ஆரோக்கிய ராஜ், பனி ஆகியோரின் வீடுகளை சூழ்ந்து கொண்டது. தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரிக்கும் நிலையில் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ம. ஶ்ரீ மரகதம்







