முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக சட்ட விரோத கடத்தல் துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்க அதிரடியாக 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார் அதிபர் ஜோ பைடன்.

இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது. மேலும், இப்போது சட்ட விரோத துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு 5 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது, கொடிய துப்பாக்கி சூடு மற்றும் பிற வன்முறையில் பயன்படுத்தப்படுகிற சட்டவிரோத கடத்தல் துப்பாக்கி வினியோகத்தை தடுப்பதில் ஒரு முக்கிய அங்கமாக அமையும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த 5 பணிக்குழுக்கள் நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வாஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அனைத்து வகை ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் புகழாரம்!

Dhamotharan

வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சகோதரிகள்!

Niruban Chakkaaravarthi

நாளை திமுக மா.செக்கள் ஆலோசனைக் கூட்டம்: துரைமுருகன்

Halley karthi