முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்படுவாரா?-வலுப்பெற்று வரும் கோரிக்கை

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியினரிடையே வலுப்பெற்று வருகிறது.

திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து துணைப் பொதுச் செயலாளர் பதவியை திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். கட்சி விதிகளின்படி பெண் ஒருவர் துணைப் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும்.

அந்த இடம் தற்போது காலியாக இருப்பதால், கனிமொழியை துணைப் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக தலைமைக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திமுக மாநிலங்களவை உறுப்பினராக 2007 மற்றும் 2013-இல் தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக மகளிர் அணியின் செயலாளராகவும் அவர் தற்போது பொறுப்பு வகித்து வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது… மாமனிதன் குறித்து இயக்குநர் சங்கர் புகழாரம்!

Web Editor

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி.. திருக்குறுங்குடி கோயிலை திறக்க வனத்துறை அனுமதி

Halley Karthik

அதிமுகவுடன் அமமுக இணையுமா?- டிடிவி தினகரன் விளக்கம்

Web Editor