“கங்குவா” திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!

“கங்குவா” திரைப்படத்தின் படபிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும்…

“கங்குவா” திரைப்படத்தின் படபிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டியும் (நடராஜ்) நடிக்கின்றனர்.

கங்குவா உலகளவில் 38 மொழிகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. ஐதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் அடுத்தாண்டு மத்தியில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்; “சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இந்நிலையில், அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியால் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி அனைவரது கவனம் ஈர்த்தது. 

இதையடுத்து, நாளை (ஜன.27) காலை 11 மணிக்கு உதிரன் போஸ்டர் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

https://twitter.com/StudioGreen2/status/1750752952879649220

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.