விஜய்யின் ‘கோட்’, கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ – இணையத்தில் பேசுபொருளான திரைப்படங்கள்!

விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் மற்றும் கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ ஒரே நேரத்தில் திரைக்கு வர உள்ளதால்,  இரு திரைப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். …

விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் மற்றும் கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ ஒரே நேரத்தில் திரைக்கு வர உள்ளதால்,  இரு திரைப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத்.  மிக குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய கங்கனா,  தாம் தூம் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.  அதேபோல், தெலுங்கிலும் கங்கனா ரனாவத்துக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.  சினிமாவை கடந்து அரசியல் ரீதியாக அடிக்கடி சர்ச்சையான கருத்துகள் கூறி ட்ரெண்டாகி வருகிறார் கங்கனா ரனாவத்.

இந்நிலையில்,  இந்தியில் எமர்சென்ஸி திரைப்படம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி கால கட்டத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது.  இதில் இந்திரா காந்தி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் :  உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் டெல்லி அமைச்சர் அதிஷி!

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீடுக்கு தயாராகி வருகிறது.  இந்த நிலையில், எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி எமர்ஜென்சி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக கங்கனா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.  இதுவும் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்மூலம் கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்துடன் நேருக்கு நேர் மோத உள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.