முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சந்திரமுகி 2ம் பாகத்தில் இணைந்தார் கங்கனா ரனாவத்

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களுக்குப் பின் ’சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பது உறுதியாகி உள்ளது. முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில், அந்த கதாப்பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

Halley Karthik

தாலிபான்கள் வாக்குறுதியை மீறிவிட்டார்கள்: அமெரிக்கா

Mohan Dass

102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan