திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் இடையேயான பிரச்சனை எதிரொலியாக கேரளாவில் அவதார் 2 திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வரும் 16ந்தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது. அவதார் திரைப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்து உலகெங்கிலும் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில் 13 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதால் அந்தப் படத்தைக் காண உலகெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கேரளாவில் இந்த படம் திட்டமிட்டபடி வரும் 16ந்தேதி வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அந்த படத்தின் வசூலில் 60 சதவீதத்தை விநியோக நிறுவனம் கேட்கும் நிலையில் 50 சதவீதம்தான் தருவோம் என கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையேயான பிரச்சனை தீர்ந்து திட்டமிட்டபடி வரும் 16ந்தே அவதார் 2 படம் தங்கள் மாநிலத்தில் வெளியாகுமா என கேரள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.