கோவை மத்திய சிறையில் கைதிகள் செல்போன்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட சோதனையில், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைச்சாலையில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதையும் மீறி சிலர் செல்போன்களைப் பதுக்கி வைத்து பயன்படுத்துவதாகச் சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார், கோவை மத்திய சிறையில் சோதனையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனையில், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், செல்போன்களை பதுக்கி வைத்திருந்த கைதிகள் மீது கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பெயரில், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: