கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா!

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோயிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு…

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோயிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த  வகையில்  இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா  காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் பாட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் காலை மற்றும் மாலை இரு வேலையும் பல்வேறு வாகனங்களில் முருகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளனர். இதனைதொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், ஜூன் 2-ந்தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 3-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பின்னா ஜூன் 4-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

—-ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.