மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன்? கமீலா நாசர்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து கமீலா நாசர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்ததில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் கமீலா நாசர். இவர்…

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து கமீலா நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்ததில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் கமீலா நாசர். இவர் நடிகர் நாசரின் மனைவி. 2019 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட கமீலா நாசர் 92,249 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். கட்சியின் சென்னை மண்டலப் பொறுப்பாளராகவும், மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

இதனிடையே சொந்த காரணங்களுக்காக மாநிலச் செயலாளர் பொறுப்பை கமீலா நாசர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, நேற்று முதல் மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசர் விடுவிக்கப்படுகிறார் என கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்தார்.

இந்த நிலையில் கமீலா நாசர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.