மிகப்பெரிய தொகைக்கு ஏலம்போன #ThugLife டிஜிட்டல் உரிமம்… எவ்வளவு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு…

#ThugLife digital license auctioned for huge amount... do you know how much?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சமீபத்தில் கூட நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடினர்.

இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.149.7 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இப்படம் அடுத்தாண்டு மே மாதம் திரைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.