அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை அவரது பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின்…

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை அவரது பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை துளசேந்திரபுரம் கிராம மக்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

இங்குள்ள தர்ம சாஸ்தா குல தெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து குழந்தைகள் கமலா ஹாரிசின் உருவப் படத்தை கையில் வைத்து கமலா ஹாரிஸ் வாழ்க என கோஷமிட்டு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply