டெல்லி பாத யாத்திரையில் ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்

டெல்லியில் ராகுல்காந்தியின் “இந்திய ஒற்றுமை” நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பங்கேற்றார்.  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய…

டெல்லியில் ராகுல்காந்தியின் “இந்திய ஒற்றுமை” நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பங்கேற்றார். 

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய ஒற்றுமை” பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தற்போது தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது.

டெல்லியில் நடைபெறும் “இந்திய ஒற்றுமை” நடைபயணத்தில் தம்மோடு பங்கேற்குமாறு, மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அந்த அழைப்பை ஏற்று டெல்லியில் இன்று ராகுல்காந்தியின் நடை பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார்.  அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏராளமானோரும் இந்த நடை பயணத்தில் பங்கேற்றனர். இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன்,  ”இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்!” என தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ள நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க உள்ளதா என்கிற விவாதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.