’லியோ’ கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கமல்ஹாசன் குரல்?

லியோ படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர்…

லியோ படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் கேரள மாநில வெளியீட்டு விநியோக உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு உரிமம் ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு, அவ்வப்போது வரும் சில அப்டேட்டுகளால் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று லியோ படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், இந்த விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னணி குரல் கமல் கொடுத்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.