பயன்படுத்தப்பட்ட சிகரெட் பஞ்சை கொண்டு கோவையைச்சேர்ந்த தன்னார்வலர்கள் தலையணை, மேட், பொம்மைகளை செய்து அசத்தியுள்ளனர்.
“புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும்” என விழிப்புணர்வு
ஏற்படுத்தி வந்தாலும் புகையிலை பயன்பாட்டை குறைப்பது என்பதே சிரமமானதாகவே
மாறியுள்ளது. புகை பிடிப்பவர்கள் பாதிக்கப்படுபதோடு காற்றில் கலந்து
மற்றவர்களும் பாதிக்கபடுவார்கள் என்பதைப்போல பயன்படுத்த சிகரெட் பஞ்சாலும்
நிலம் மற்றும் நீர் மாசுபடுகிறது.
ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்களுடன் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு பிறகு நிக்கோட்டிடன் சேர்ந்து தூக்கி எரியபடுகின்றன இந்த கரெட் பஞ்சுகள். குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளுக்கு பிறகே மட்கும் தன்மை கொண்ட இந்த சிகரெட் பஞ்சுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த பஞ்சுகள் சேகரிக்கபட்டு பயன்படுத்தும் பொருட்களாக மாற்றியுள்ளனர் கோவை தன்னார்வலர்கள். அதன்படி பயன்படுத்தப்பட்ட சிகரெட் பஞ்சை கொண்டு கோவையைச்சேர்ந்த தன்னார்வலர்கள் தலையணை, மேட், பொம்மைகளைச் செய்து அசத்தியுள்ளனர்.
தன்னார்வலர் ஹபீஸ் என்பவர் கோவையில் சர்ஜிகேர் கடை நடத்தி வருகிறார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த பஞ்சுகளை ஒவ்வொரு பெட்டிக்கடை மற்றும் சிகிரெட் விற்கும் கடைகளில் சேகரிக்கின்றனர். இந்த பஞ்சை ஐந்து முறைகளில் வேதிப்பொருட்களின் உதவியுடன் சுத்தம் செய்து பின் அவற்றை முறையாக உலர்த்தி தலையணை உள்ளிட்ட பொருட்களாக மாற்றி தருகின்றனர்.
ஒரு கிலோ பஞ்சை மறுசுழற்சி பயன்பாட்டுக்கு கொண்டுவர இரண்டாயிரம் ரூபாய் வரை செலவு செய்யக்கூடும் எனக்கூறும் ஹபீஸ் இவ்வாறு பஞ்சை மறுசுழற்சி செய்து
தயாரிக்கப்படும் தலையணைகளைக் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதில் பெறப்படும் நிக்கோடின் விவசாய பயன்பாட்டிற்காக அனுப்பப்படுவதாகவும், காகிதம் சிவகாசிக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
குப்பையாக மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கு கேடாக உள்ள சிகரெட் பஞ்சை
மறுசுழற்சி முறையில் பொருட்களாக மாற்றி இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கும்
தன்னார்வலர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.









