முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்சினிமா

கமல்ஹாசன் பிறந்தநாள்: ஏவிஎம் மியூசியத்தில் ’சகலகலா வல்லவன்’ புல்லட்!

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற புல்லட் ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’-ல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ துவங்கியதில் இருந்து சினிமாவின் பாரம்பரியத்தை, சினிமா வரலாற்றை கொண்டாடும் வகையிலான நேர்த்தியான பழமை வாய்ந்த சேகரிப்புகளை காட்சிப்படுத்தி வருகிறது.  அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி: தி பாஸ், அயன்,  திருப்பதி மற்றும் பல படங்களில் இடம்பெற்ற அரிய வாகனங்களின் தொகுப்புகளை கவனமாக பாதுகாக்கும் காப்பகமாகவும் இந்த மியூசியம் செயல்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாளை (நவ-7)  70வது பிறந்தநாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனின்  ரசிகர்களுக்கு விருந்தாக, இந்த மியூசியம் அவரது பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற பிரபலமான, 1980 மாடல் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை காட்சிப்படுத்த இருக்கிறது.

ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 1982 ஆகஸ்ட்-14ஆம் தேதி வெளியான ‘சகலகலா வல்லவன்’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர் வட்டத்தை ‘கிளாஸ்’-லிருந்து ‘மாஸ்’ ஹீரோ என்கிற அளவில் விரிவிவாக்கியதுடன்,  அவரது நடனம் மற்றும் சண்டை காட்சிகளுக்காகவும் பாராட்டப்பட்டது..  பஞ்சு அருணாச்சலம் எழுத்தில், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் அம்பிகா மற்றும் துளசி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  இசைஞானி இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பல ரகப்பட்ட பாடல்களுக்காக இப்படத்தின் இசை இன்றளவும் நினைத்து பார்க்கப்படுகிறது.  இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படமாகவும் மாறியது. 1989ல் ‘அபிமன்யு’ என்கிற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

‘சகலகலா வல்லவன்’ எனும் பட்டத்திற்கு ஏற்ப, உலக நாயகன் கமல்ஹாசன் சகல கலைகளிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் விதமாக ஏவிஎம் புரொடக்சன்ஸ் இப்படத்தை உருவாக்கியது.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் இடம்பெற்ற ’இளமை இதோ இதோ’ எனும் பாடல் தமிழ் சினிமாவில் புத்தாண்டை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக திகழ்வதுடன்,  ஒவ்வொரு புத்தாண்டிலும் வானொலி மற்று தொலைக்காட்சி சேனல்களில் தவறாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  புல்லட் வாகனத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் நடைமுறையை கொண்டு வந்த படமாகவும் இது அமைந்தது.

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (நவ-7) இந்த மியூசியம் திறந்திருக்கும். மேலும் அவர் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்ட் புல்லட் காட்சிக்கு வைக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் சேவை துவக்கம்; பயணிகள் உற்சாகம்!

Web Editor

கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?? – LIVE UPDATES

Jeni

கோயில் தோற்றத்தில் உருவாகும் ராமேஸ்வரம் ரயில்நிலையம் – எப்போது பணி நிறைவடையும்?

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading