”நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்”- கமல்ஹாசன்!

நடிகர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். அவர் ஜனவரியில் கட்சி…

நடிகர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். அவர் ஜனவரியில் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் இந்த திடீர் அறிவிப்பால் வருத்தமடைந்தனர். அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இருப்பினும் உடல்நிலை முக்கியம் என்பதால் அவரது முடிவை வரவேற்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ரஜினியை சந்தித்து நலம் விசாரிப்பேன் என தெரிவித்தார். அனைவரிடத்திலும் ஆதரவு கேட்பேன் என கூறிய கமல்ஹாசன், நண்பர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் எனக் கூறினார். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் என தெரிவித்த அவர், தனது தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது கட்சியினரின் ஆசை என தெரிவித்தார். திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம் என்றும், அதை இரண்டு கட்சிகளுக்கு மட்டும் பிரித்து கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply