முக்கியச் செய்திகள் தமிழகம்

கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை

நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐதராபாத் சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு
காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கமல்ஹாசனுக்கு சாதாரண காய்ச்சலா அல்லது வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சலா என்ற அடிப்படையில் சோதனை மேற்கோள்ளப்பட்டதாகவும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “லேசான காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு காரணமாக கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இன்று அல்லது ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”நல்லது செய்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்பது கேரள உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது”- கமல்ஹாசன்!

Jayapriya

விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி

Jeba Arul Robinson

விவசாயிகள் போராட்டம்; கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!

Dhamotharan