முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு

மலேசியாவின் 10வது பிரதமராக மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று பதவியேற்றுக்கொண்டார்.   

மலேசியா நாடாளுமன்றத்திற்கு கடந்த 19ந்தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.  மொத்தம் உள்ள 222 இடங்களில் ஆட்சி அமைக்க 112 இடங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான பகதான் ஹரப்பான் கூட்டணி 82 இடங்களை வென்றது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பெரிகதான் நேஷனல் கூட்டணி 72 இடங்களை வென்றது.

இதனால் எந்தக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் மலேசிய அரசியலில் கடந்த 5 நாட்களாக குழப்பம் நிலவியது. இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அன்வர் இப்ராஹிமிற்கு உள்ளதாக கருதிய மன்னர் சுல்தான் அப்துல்லா, அவரை மலேசியாவின் பிரதமராக நியமித்தார்.

இந்நிலையில் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள  தேசிய அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மலேசிய பிரதமராக மகாதீர் முகமது இருந்தபோது அந்நாட்டின் துணை பிரதமராகவும், பொறுப்பு பிரதமராகவும் பதவி வகித்தவர் அன்வர் இப்ராஹிம். பின்னர்  ஊழல் வழக்குகள் மற்றும் ஓரினச் சேர்க்கை சர்ச்சைகளில் சிக்கி பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அன்வர் இப்ராஹிம் கடந்த 2004ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பையடுத்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அரசியலில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவர், கடுமையாக போராடி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைந்தார். தற்போது மலேசியாவின் 10வது பிரதமராகவும் பதவியேற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓபிஎஸ்-ன் யுக்திகள் தோல்வியில் முடியும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

EZHILARASAN D

ரயில் முன் விழுந்த காதல் ஜோடி.. தற்கொலை கடிதத்தில் இருந்தது என்ன?

Janani

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; லட்சக்கணக்கில் பணம்

EZHILARASAN D