முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழிசை, கமல்ஹாசன் பக்ரீத் வாழ்த்து

நாளை பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ”புதுச்சேரியில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்து பக்ரித் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரித் திருவிழா தியாகம், ஈகை மற்றும் பக்தியின் உயர்வைக் குறிக்கிறது. பக்ரித் திருவிழா கொண்டாட்டங்கள் சகோதரத்துவம், சேவை மற்றும் தியாக உணர்வுகளை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கம், இரக்கம், நட்பு போன்றவற்றை ஊக்குவிப்பதே உண்மையான பக்ரித் கொண்டாட்டங்களின் நோக்கம். கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பக்ரித் திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஈகையும் தியாகமும் பெருகட்டும். அளவற்ற அன்பு பரவட்டும்.”என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

Gayathri Venkatesan

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை!

Saravana