முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங், லக்னௌவில் உள்ள சஞ்சை காந்தி மருத்துவக் கல்லூரியில் கடந்த ஜூலை 4ம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பல உடல் உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

முன்னதாக 89 வயதான கல்யாண் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மத்திய அமைச்சர்கள் மற்றும் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நலம் விசாரித்திருந்தனர். இவர் கடந்த 2014 முதல் 2019 வரை ராஜஸ்தான் ஆளுநராகவும், 1991 முதல் 1992 வரை உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு: 463 பேர் உயிரிழப்பு!

Halley karthi

வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்

Gayathri Venkatesan

கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு