துனீஷியா அதிபராக மீண்டும் பதவியேற்கிறார் #KaisSyed!

துனீஷியா அதிபர் தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் கடந்த 6ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் வெறும் 28.8…

#KaisSyed is re-instated as President of Tunisia

துனீஷியா அதிபர் தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் கடந்த 6ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் வெறும் 28.8 சதவித வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 90.69 சதவித வாக்குகளை கையிஸ் சையத் பெற்றுள்ளார்.

அதன்படி, துனீஷியா அதிபர் தேர்தலில் அதிபராக கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, கையிஸ் சையத் இரண்டாவது முறையாக துனீஷியா நாட்டின் அதிபரானார். இதற்கு முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கைஸ் சையத் 72சதவித வாக்குகள் பெற்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்கள் : Tenkasi | குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு ஆணை மூலம் ஆட்சி செய்வதாக அறிவித்தார். இதற்கு ஏற்ப அந்நாட்டு அரசியலமைப்பு 2022 ஆம் ஆண்டு மாற்றி எழுதப்பட்டது. அதன்படி துனிசியாவில் அதிபருக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு குறைந்த அளவிலான அதிகாரத்தை வழங்கும் வகையில் மாற்றப்பட்டது. தற்போது பிரதமராக பொறுப்பேறகும் மௌதரி கடந்த மே மாதம் தான் அமைச்சரவையில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.