தான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன் என்றும் அனைத்து சமுதாயத்தினரும் தன்னை எளிதில் அணுகலாம் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கழுகுமலை நகரப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கழுகுமலை பகுதிகளில் கடம்பூர் ராஜூவுடன் இணைந்து தெக்ஷண மாற நாடார் சங்கம் மற்றும் மள்ளர் மீட்பு கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.பின்னர் பேசிய அவர், தான் அனைத்து சமுதாயத்தினருடன் இயல்பாக பழகக் கூடியவன் என்றும் அனைத்து சமுதாயத்தினரும் தன்னை எளிதில் அணுகலாம் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.







