முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியளித்த ஆர்.கே.சுரேஷ்

பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ்.கபடி வீரரான இவர் சில நாட்களுக்கு முன்னர் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் அவரது குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து கபடி வீரர் விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நியூஸ்7தமிழுக்கு பேட்டியளித்த அவர், “தற்போது நான் நடித்து வெளிவரவுள்ள திரைப்படத்தில் வரும் காட்சியை போன்றே விமல்ராஜ் உயிரிழப்பு நடந்துள்ளது. நாடே ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இழந்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்திக்கும் போது இதுதொடர்பாக பேசுவேன். மதுரையில் நடைபெறும் கபடி போட்டியில் கபடி வீரர் விமல்ராஜை கௌரவிக்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்வேன்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“என்னை கைவிட்டுவிடாதீர்கள்”: கண்ணீர்விட்டு அழுத திமுக வேட்பாளர்!

EZHILARASAN D

தேசிய மருத்துவர்கள் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து

Mohan Dass

சென்னை வந்தது 1.66 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள்!

Halley Karthik