ரஜினி நடிப்பில் வெளியான “ஜெயிலர்” படத்தின் “காவாலா” பாடல் வெளியான நிலையில், 3 மணிநேரத்தில் 7 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இதுவரை ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ₹ 640 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ₹ 650 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ வீடியோ பாடல் SUNNXT ஓடிடி தளத்தில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பாடல் வெளியானது. தற்போது வெளியாகி 3 மணிநேரம் ஆகிய நிலையில், அதற்குள் இந்த பாடலை 7 லட்சத்திற்கு மேலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த பாடல் வெளியானபோதே மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.







