‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’: இதற்கு முன் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடுகள்…!

செப்டம்பர் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியா என்ற பெயர் பாரதம் என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பெயரை மாற்றிக்கொண்ட நாடுகளின் பட்டியலை இங்கே காணலாம்……

செப்டம்பர் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியா என்ற பெயர் பாரதம் என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பெயரை மாற்றிக்கொண்ட நாடுகளின் பட்டியலை இங்கே காணலாம்…

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்தளிக்கிறார். அதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் பிரதமர் மோடி அரமுறைப் பயணமாக இந்தோனேஷியா செல்ல உள்ள நிலையில் அவரது பயணம் குறித்து வெளியான நிகழ்ச்சி நிரலில் ”Prime Minister of Bharath” என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்த காரணத்தால்தான் மத்திய பாஜக அரசு அந்த பெயரை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன.

Imageஇந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கவிருப்பதும், இந்தியா என்பது பாரதம் என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என்ற சந்தேகங்களும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதம் என சூட்டுவதற்கு இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது.

இதற்கிடையே, தங்கள் நாட்டின் பெயர்களை தாங்களே மாற்றி அமைத்துக் கொண்ட நாடுகளின் பட்டியல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, உலக நாடுகளில் 11 நாடுகள் தங்களது பெயர்களை பல்வேறு காலக்கட்டங்களில் மாற்றியமைத்துக் கொண்டுள்ளன.

அவ்வாறு பெயரை மாற்றம் செய்யப்பட்ட நாடுகள்:

2022 துர்க்கியே (துருக்கி)

2019 மியான்மர் (பர்மா)

2018 எஸ்வாதினி (ஸ்வாத்திலாந்து)

2002 டிமோர் லாஸ்டி (ஈஸ்ட் டிமோர்)

1997 காங்கோ ஜனநாயக குடியரசு (ஜைர்)

1972 ஸ்ரீலங்கா (சிலோன்)

1966 போட்ஸ்வானா (பெச்சுவான்லாந்து)

1957 கானா (கோல்ட் கோஸ்ட்)

1949 ஜோர்டான் (டிரான்ஸ்ஜோர்டான்)

1939 தாய்லாந்து (சியாம்)

1935 ஈரான் (பெர்சியா)

இவ்வாறு 11 நாடுகள் இதுவரை தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சில நாடுகள் போரின்போது பிரிந்து, ஒரு நாடு இரண்டு நாடாக பிரியும் போதும் புதிய பெயர்கள் சூட்டப்பட்ட வரலாறும் இருந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.