முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து 2வது நாளாக ஜோதிமணி எம்.பி போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி , 2வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மத்திய அரசு திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் அளித்திருந்தார்.

ஆனால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடித்தியும் போராட்டத்தைக் கைவிட மறுத்த அவர் 20 மணி நேரமாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் நடத்தும் கடிதம் தனக்கு தரும் வரை போராட்டம் நடைபெறும் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணம் கொள்ளை; இரண்டு பேர் கைது

Halley karthi

கார் விபத்து; யாஷிகா ஆனந்த் மீது வழக்குப் பதிவு

Saravana Kumar

தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்!