ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ – அக்டோபர் மாதம் வெளியீடு!

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தேவரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஏப்ரல் 5 -ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள்…

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தேவரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஏப்ரல் 5 -ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவாரா’. இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.  இதில் ஜான்வி கபூர்,  சைப் அலிகான்,  பிரகாஷ் ராஜ்,  ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார்.

https://twitter.com/DevaraMovie/status/1758472883259793482

யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த மாதம் வெளியான படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை  எட்டிய நிலையில்,  திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் 10 -ஆம் தேதி தேவரா பாகம் – 1 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.