இயக்குநராக அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலம்..!

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகவுள்ள  ‘ஜாம் ஜாம்’ என்ற படத்தின் மூலம் யூடியூபரும், பிக்பாஸ் பிரபலமும் ஆன அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். “ஓ மை கடவுளே”, “பேச்சுலர்” என்ற இரண்டு வெற்றிப்…

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகவுள்ள  ‘ஜாம் ஜாம்’ என்ற படத்தின் மூலம் யூடியூபரும், பிக்பாஸ் பிரபலமும் ஆன அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார்.

“ஓ மை கடவுளே”, “பேச்சுலர்” என்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். இந்த படங்களை தொடர்ந்து லவ் டிரையாலஜி சார்ந்த காதல் கதையாக ‘ஜாம் ஜாம்’ படத்தை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜாம் ஜாம்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார் யூடியூபரும், பிக்பாஸ் பிரபலமும் ஆன அபிஷேக் ராஜா. “வழக்கமான ரொமான்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது. மாறாக, அதிகமான என்டர்டெயின்மெண்ட், ரொமான்சுடன் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும்” என படத்தின் இயக்குநர் அபிஷேக் ராஜா கூறியுள்ளார்.

இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள எடிட்டர் அபினவ் சுந்தர் படத்தொகுப்பை கவனிக்கிறார். இவர் வினீத் சீனிவாசன் நடித்த, முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.