முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக நிர்வாகி வீட்டில் உணவருந்திய ஜே.பி.நட்டா

பட்டியலின வகுப்பைச் சார்ந்த பாஜக பிரமுகரான ராமலிங்கம் வீட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உணவருந்தினார்.

இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தமிழகம் வந்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து இரண்டாம் நாளான இன்று காலையில் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஜே.பி.நட்டா, காரைக்குடி அருகே நெசவாளர் காலனியில் உள்ள பட்டியலின வகுப்பைச் சார்ந்த பாஜக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் வீட்டில்  அவரது குடும்ப உறுப்பினர்களுடன் காலை உணவு அருந்தினார். உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

பின்னர் அங்கு சிறிது நேரம் உரையாடியவர் பின்பு அங்கிருந்து காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசிய தலைவர் காரைக்குடி அருகே உள்ள பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் குக்கிராமத்திற்கு உணவருந்த சென்றது அப்பகுதி மக்களை இன்பத்தில் ஆழ்த்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு; தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

Arivazhagan Chinnasamy

பழங்குடியினர் பிரச்னைகள் பற்றி எழுதுபவரா நீங்கள்?-ரூ.1 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

Web Editor

கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்தி விடலாம்: ஆ.ராசா எம்.பி பேச்சு!

Arivazhagan Chinnasamy