காலை உணவு திட்டம்: ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர்

அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு…

அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 15ம் தேதியன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, துறைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் விவரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் கேட்டறிந்தார்.

அப்போது தொலைபேசியில் பேசிய அவர், காலையில் உணவு சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா? மாணவர்கள் சரியாக சாப்பிடுகிறார்களா என்பது போன்ற தகவல்களை கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.