12 நாட்களில் ஜோஷிமத் நகரம் பூமிக்குள் 5.4 சென்டி மீட்டர் அளவுக்கு புதைந்திருப்பது இஸ்ரோவின் செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் நிலச்சரிவு காரணமாக கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதையடுத்து மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரையிலான 12 நாட்களில் மட்டும் ஜோஷிமத் நகரம், 5.4 சென்டி மீட்டர் புதைந்திருப்பது இஸ்ரோவின் பிரிவான தேசிய தொலை உணர்வு மையம் வெளியிட்டுள்ள செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜோஷிமத் நகரம் பூமிக்குள் 9 சென்டி மீட்டீர் அளவுக்கு புதைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் Cartosat-2S செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.