ஜான்… ஜான்… ஜான்…! – வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ பட ட்ரெய்லர்

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இத்திரைப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், விநாயகன், பார்த்திபன்…

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இத்திரைப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், விநாயகன், பார்த்திபன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல காரணங்களால் ஐந்து ஆண்டுகளாக திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. மேலும் நிதி நெருக்கடியால் வெளியாவதில் தாமதமானதாக கூறப்பட்டது.

நீண்ட எதிர்பார்ப்புகளை அடுத்து, துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஒரு மனம் மற்றும் ஹிஸ் நேம் இஸ் ஜான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையும் படியுங்கள் : ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்

முன்னதாக துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்ல் பிளாசரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர், விக்ரமின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.