கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை திறப்பு விழா: இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்பு!

முல்லைப் பெரியாறு அணையை அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக இங்கிலாந்தில் அமைக்கப்படும் சிலைக்கான திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்கவுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையை செலவு செய்து அமைத்த,…

முல்லைப் பெரியாறு அணையை அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக இங்கிலாந்தில் அமைக்கப்படும் சிலைக்கான திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்கவுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக்கிற்கு சிலை நிறுவப்படும் என ஜனவரி 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி ஒப்புதலும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை 30ஆம் தேதி இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவருக்குப் பதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தைச்சேர்ந்த இளவரசர் வில்லியம் – கதே தம்பதியினரும் பங்கேற்கவுள்ளனர். சிலை திறப்பிற்கான ஏற்பாடுகள் லண்டன் வாழ் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.