தமிழ் நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜில்லா திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் நடிப்பில் ஆர்.டி. நேசன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜில்லா. சூப்பர் குட் பிளிம்ஸ் தயாரித்த இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். 2014 பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.





