சென்னையில் ஆபரண தங்கம் விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு 400 ரூபாய் அதிகரிப்பு

கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு ஒரு நாட்டின் தங்கத்தின்…

கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பதால் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென புதிய உச்சத்தை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 645 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 80 காசுகளுக்கும் , ஒரு கிலோ வெள்ளி 76 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.