ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு: மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளைப்போன விவகாரத்தில் மேலும் 43 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா வீட்டில் இருந்த…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளைப்போன விவகாரத்தில் மேலும் 43 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா வீட்டில் இருந்த வைர நகைகள், பழங்கால தங்கத் நகைகள், நவரத்தினம் நகைகள் என சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்போட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடைப்படையில், இவரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 1கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர்நவாலி என்பதும், திருடப்பட்ட நகைகளை வாங்கியதாகவும் தேனாம்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும், வினால்க் சங்கர் நவாலியிடம் 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மீதமுள்ள நகைகளை மீட்பதற்காக ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேன் ஆகிய இருவரையும் நேற்று காவலில் எடுத்த தேனாம்பேட்டை போலீசார் இரண்டு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 43 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 100 சவரன் நகைகளை மீட்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.