கர்நாடக மாநிலம், சிரா அருகே லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் அனைவரும் தினக் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் குமார் ஷாபூர்வாட் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
-ம.பவித்ரா








