JEE Advanced தேர்வில் ஒட்டுமொத்தமாக தென்மண்டலம் கடந்த ஆண்டை விட இந்த முறை முன்னேறியுள்ளது. JEE Advanced தேர்வில் 15.28% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,களில் சேரலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
JEE Advanced தேர்வு முடிவுகள் தொடர்பாக அவர் கூறியதாவது:
JEE Advanced தேர்வில் ஒட்டுமொத்தமாக தென்மண்டலம் கடந்த ஆண்டை விட இந்த முறை முன்னேறியுள்ளது. JEE Advanced தேர்வில் 15.28% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,களில் சேரலாம். 29 பேர் டாப் 100-ல் இடம்பெற்றுள்ளனர்
முதலாம் ஆண்டில் ஒரு படிப்பில் சேர்ந்துவிட்டு, 2-ம் ஆண்டில் பிடித்தமான வேறு படிப்பில் சேர்ந்துகொள்ளலாம். அக்னி கோள் ராக்கெட், ஹைப்பர் லூப் ரயில் ஆகிய திட்டங்களை சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
கணினி அறிவியல் மட்டுமல்லாது, பல்துறை மாணவர்கள் சேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
Inter Disciplinary Courses-களில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். www.askiitm.com என்ற இணையதளத்தில் உயர்கல்வி சேரவிரும்பும் மாணவர்கள் தங்களின் கேள்விகளை எழுப்பலாம்; பதிலளிக்கப்படும்.
மும்பை ஐ.ஐ.டி.யும், சென்னை ஐ.ஐ.டி.யும் ஒரே அளவில் தான் உள்ளன ; ஒரே மாதிரியான பாடத்திட்டமே பின்பற்றப்படுகிறது. பள்ளிக் கல்வியை மேலும் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
5-ம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தை மேம்படுத்தி, நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.யால் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது ; அடுத்த ஓராண்டுக்குள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான கற்றல் உபகரணங்களை ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
5-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிப்பைத் தாண்டிய சில பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் ; இதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் 1,150 இடங்கள் உள்ளன.
மாணவர்கள் எந்தப் படிப்பில் வேண்டுமானாலும் சேரலாம் ; எதுவும் குறைந்தது இல்லை ; ஆனால் Inter Disciplinary படிப்புகளைத் தேர்வு செய்தால் தான் எதிர்காலம் வளமாக இருக்கும் என்றார் காமகோடி.








