அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தை அடுத்து ஜெயம் ரவி எடுக்கும் புது அவதாரம்

தமிழ் திரையுலகில் பல படங்களைக் கையில் வைத்துக்கொண்டு வலம் வருகிறார் ஜெயம் ரவி. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துவருகிறார்.…

தமிழ் திரையுலகில் பல படங்களைக் கையில் வைத்துக்கொண்டு வலம் வருகிறார் ஜெயம் ரவி.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துவருகிறார். இதனால் இவரின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் ஜெயம் ரவி நடிப்பில் சைரன் என்ற படம் வெளிவரவுள்ளது.இப்படத்தில் ஜெயம் ரவியுடன் முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார். ஹோம் மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த சைரன் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.சுமார் 1 நிமிடம் 17 நொடிகள் ஓடக்கூடிய மோஷன் போஸ்டரில் படத்தில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்ற தகவல்களோடு, ஜெயம் ரவியின் தோற்றமும் இடம் பெற்றுள்ளது. சாலை விபத்தையும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கும் இந்த மோஷன் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளத

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.