3 ஆண்டு சட்டப் படிப்பு – செப்டம்பர் 19 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 3…

தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று காலஅவகாசம் செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்குமாறு பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.