கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் ஜெயம் ரவி!

கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி…

கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளார்.

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.  படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்,  கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இந்த நிலையில் ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் இப்படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.  இந்த வீடியோ கமலின் பிறந்த நாளான நவ.7-ல் (நாளை) வெளியாகவுள்ளது.  இதற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து ராஜ் கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே கமல்ஹாசனின் 234வது படத்தில் நடிகர் ஜெயம் ரவி இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.  இதன்மூலம் கமலுடன் முதல்முறையாக ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ளார்.  மேலும் இதற்கு முன்னதாக இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா இணைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.