ஜெயலிலதா பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து கட்சி கொடியேற்றி வைத்து கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.