ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா துபாயில் இன்று மாலை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிரூத், இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா துபாயில் உள்ள பூஜ் கலிபா கட்டடத்தில் நடைபெறவுள்ளதால், நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் சென்னை விமான நிலையம் வந்தனர்.
அப்போது, இசையமைப்பாளர் அனிரூத்துடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் ரசிகர்களை கலைத்து அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.







